1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (07:53 IST)

ஜி வி பிரகாஷ் சைந்தவி தம்பதிகளுக்கு குட்டி தேவதை! வாழ்த்து மழைப் பொழியும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வரும் ஜி வி பிரகாஷுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஜி வி பிரகாஷ் மிக இளம் வயதில் இசையமைப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமாகி தரமான இசையால ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். பின்னர் இவர் நடிகராகவும் அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சைந்தவிக்கு நேற்று அழகானப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தி சமூகவலைதளத்தில் பரவவே பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.