1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:09 IST)

கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு பதில் விஷ்ணு விஷாலா? லேட்டஸ்ட் அப்டேட்!

முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை மற்றும் ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ள அவர் இப்போது ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது அவர் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த கொரோனா குமார் திரைப்படமாக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை விஷ்ணு விஷாலே தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.