வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (07:30 IST)

சிம்பு தேசிங் பெரியசாமி படம் ட்ராப்பா… திடீரென பரவிய தகவல்!

பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி எந்த வீடியோவும் வெளியிடவில்லை.

இந்த படம் ஒரு வரலாற்றுப் புனைவு படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். அதில் ஒரு வேடம் வில்லன் வேடம் என சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பலமுறை திட்டமிடப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இந்த படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக திடீரென தகவல்கள் பரவ ஆரம்பித்தன. ஆனால் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும், விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.