சிம்புவின் வருங்கால மனைவியை செலக்ட் செய்வது யார் தெரியுமா? டி.ராஜேந்தர் விளக்கம்
நடிகர் சிம்பு நடித்த 'ஏஏஏ' படம் படுதோல்வி அடைந்ததால் அவருடைய மார்க்கெட் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. அதை தூக்கி நிறுத்த ஒரு ஆங்கில படத்தில் அவர் நடித்து வருவதாகவும், அந்த படம் இம்மாதம் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சிம்புவின் படம் இதுவரை அறிவித்தபடி வெளியானதாக சரித்திரமே இல்லாத நிலையில் இந்த படமாவது சொன்னபடி வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இந்த நிலையில் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக டி.ராஜேந்தர் இன்று திருப்பதியில் வழிபாடு நடத்தினார். சிம்புவுக்கு சரியான பெண்ணை சிம்புவால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்றும், அவர் தேர்வு செய்யும் பெண் நிச்சயமாக தங்கமான பெண்ணாகவும், ஐஸ்வர்யமான பெண்ணாகவும் இருப்பார் என்றும் டி.ராஜேந்தர் திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறினார்.