வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (23:40 IST)

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் டி.ராஜேந்தர்

rajendar
இயக்குனரும் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு மேல் சிகிச்சை அளிக்க அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப் போவதாகவும் அவருடைய மகன் சிம்பு அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டிருந்தார்

இந்த நிலையில், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளி நாட்டில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இதற்காக டி.ராஜேந்தர் நாளை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு அமெரிக்கா புறப்பட்டுச் சென்று அதற்காக முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.