அதிரப்போகும் சென்னை… விரைவில் டி ராஜேந்தர் இசைக் கச்சேரி?
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பலதுறைகளில் செயல்பட்டவர் டி ராஜேந்தர். அவரின் படங்கள் 80 களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை செலுத்தின. அதன் பின்னர் அவர் அறிமுகப்படுத்திய அவரின் மகன் சிம்பு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
சில ஆண்டுகளாக சினிமாவில் இடைவெளி விட்டிருந்த டி ஆர் இப்போது மீண்டும் ஒரு படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். கடைசிவரை நான் தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு இசையமைப்பாளராகிறார்.
இந்நிலையில் இப்போது டி ராஜேந்தர் ரசிகர்களுக்கு குஷியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விரைவில் சென்னையில் டி ராஜேந்தர் இசைக் கச்சேரி ஒன்று நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான தகவல் சமூகவலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.