திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (09:29 IST)

கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஓடிடி தளங்களுக்கு அழைப்பு

52வது சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக ஓடிடி தளங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் கோவா சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி இந்தத் திரைப்பட விழா முடிவடையும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடக்காமல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடந்தது. 
 
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 52 ஆவது சர்வதேச திரைப்பட விழா வழக்கம்போல நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவாவில் நடைபெறும் 52வது சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக ஓடிடி தளங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடக்கும் விழாவிற்கு ஓடிடி தளங்களான நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லிவ் ஓடிடி தளங்கள் விழாவில் கலந்துகொள்கின்றன.