விஜய் சேதுபதியை பாராட்டிய ஈஸவரன் இயக்குனர்!

Last Modified புதன், 13 ஜனவரி 2021 (11:00 IST)
நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தில் வில்லத்தனத்தை ரசிக்கும் படியாக செய்துள்ளதாக் இயக்குனர் சுசீந்தரன் பாராட்டியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று காலை 4 மணிக்காட்சியோடு ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும்
மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. சிறப்புக் காட்சி முடிந்து படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் முதல் பாதி செம்மயாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக செல்வதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பலரும் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

இன்று காலை ரசிகர்களோடு படம் பார்த்த இயக்குனர் சுசீந்தரன் ‘சொந்த ஊரில் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்தேன். துப்பாக்கிக்கு பிறகு விஜய்க்கு மாஸ்டர் பீஸ் திரைப்படமாக அமைந்துள்ளது. குறிப்பாக விஜய் சேதுபதி வில்லத்தனமான நடிப்பை ரசிக்கும் படி வழங்கியுள்ளார். படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.’ எனக் கூறியுள்ளார். நாளை அவர் இயக்கியுள்ள ஈஸவரன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :