செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜனவரி 2021 (09:42 IST)

மாஸ்டர் படம் பாக்க வந்தவங்களுக்கு மர கன்றுகள்! – வேற லெவல் செய்த மும்பை விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள மாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படம் பார்க்க வருபவர்களுக்கு சானிட்டைசர், மர கன்றுகள் வழங்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

பொங்கலை முன்னிட்டி நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதிகாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 50 சதவீதம் இருக்கைகளுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளையும் கட்டாயமாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது, இந்நிலையில் மும்பையில் மாஸ்டர் திரைப்படம் வெளியான திரையரங்கு ஒன்றில் விஜய் ரசிகர்கள் படம் பார்க்க வருபவர்களுக்கு சானிட்டைசர், மரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர். அவர்களது இந்த செயல் பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது.