செவ்வாய், 4 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (21:26 IST)

''#ANTIBIKILI'' பணம் உலகைக் காலி பண்ணிவிடும்- விஜய் ஆண்டனி டுவீட்

தமிழ் சினிமாவில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2005ம் ஆண்டிலிருந்து பல்வேறு படங்களுக்கு இடையமைத்திருக்கிறார். அத்துடன் நான், சலீம் , பிச்சைக்காரன், சைத்தான், எமன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

பிச்சைக்காரன் 2 பட ஷூட்டிங் மலேசியாவில் உள்ள ஒரு தீவில் நடைபெற்றபோது,  ‘வாட்டர் ஸ்கூட்டியில்’ கதநாயகியுடன் செல்வது போன்ற காட்சியில் விஜய் ஆண்டனி ஓட்டிய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு படகின் மீது மோதி, கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது,

இதில், விஜய் ஆண்டனி பலத்த காயம் அடைந்து  முகம் சேதமடைந்து பலத்த காயத்துடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கான சிகிச்சைக்குப்  பின்னர், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தன் டுவிட்டர் பக்கதில், ‘’அன்பு இதயங்களே...நான் 90% குணம் அடைந்து விட்டேன் என்றும் ஏப்ரல் மாதம் வெளியாகும் பிச்சைக்காரன்-2 படத்திற்கான ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாக’’ தெரிவித்தார்.

இந்த நிலையில்,இன்று  தன் சமூக வலைதளத்தில்,  ‘’நாளை மாலை 5 மணிக்கு பிச்சைக்காரன்-2 பட ஒரு நிமிட ஸ்னீக் பீக் வீடியோ வெளியிடப்படும்’’ என்று பதிவிட்டு, ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.