வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 ஜூலை 2022 (20:36 IST)

அன்பான கணவரை இழந்து வாடுகிறேன்- நடிகை மீனா

meena vishyasakar
தனது கணவர் வித்யாசாகர் இறப்பு குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என நடிமை மீனா கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகை மீனாவின்  கணவருக்கு புறாவின் எச்சத்தால் ஏற்படும் சுவாசத் தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு, வேறு ஒருவரிடம் இருந்து பெறுவதாக மருத்துவமனை திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குத் தாமதம் ஆனதால், இப்டியே அவர் குணமாகலாம் என  நினைத்தனர். துரதிஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களுக்கு முன் காலமான நிலையில்  அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

நடிகை மீனாவின் கணவர் வித்தியாசகரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரொனாவால்தான் வித்யாசாகர் உயிரிழந்தார் என வதந்திகள் பரப்பி வருகிறது.

இந்த நிலையில் நடிகை மீனா உருக்கமான ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,  என் அன்பான கணவர் வித்யாசாகரை இழந்து வாடுகிறேன். எங்களின் சூழ் நிலையைப் புரிந்துகொடு, எங்கள் தனிப்பட்ட விசயங்களுக்கு மதிப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதில், வதந்திகளைப் பரப்பை வேண்டாம்.  இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் துயரத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது   நன்றி எனத்தெரிவித்துள்ளார்.