1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (17:20 IST)

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? மருத்துவமனை ஊழியர் அதிர்ச்சி தகவல்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது கொலை என மருத்துவமனை ஊழியர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் தில் பேச்சாரா, எம்.எஸ் தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி இவர் மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுஷாந்தின் காதலி உள்ளிட்ட பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை தொடர்ந்து வருகிறது.


இந்நிலையில் சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த குழுவில் இருந்த மருத்துவமனை ஊழியர் ரூப்குமார் ஷா என்பவர், சுஷாந்த் சிங் கழுத்திலும், உடலின் பிற பகுதிகளிலும் காயங்கள் தென்பட்டதாகவும், அதை கண்டதுமே கொலை என ஊகிக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்காமல் ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே எடுத்துவிட்டு போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டார்கள் என்றும் அவர் பேசியுள்ளார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K