வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2021 (12:32 IST)

’ஈஸ்வரன்’ ரிலீஸான மறுநாளே சுசீந்திரன் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

சிம்பு நடிப்பில் நேற்று வெளியான ’ஈஸ்வரன்’ திரைப்படத்தை இயக்கிய சுசீந்திரன் அவர்களின் தாயார் சற்றுமுன்னர் மாரடைப்பால் காலமானதாக வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
’ஈஸ்வரன்’ திரைப்படம் ரிலீசான மறுநாளே அவரது வீட்டில் சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது திரையுலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுசீந்திரன் தாயார் விஜயலட்சுமி அவர்களுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காலமான சுசீந்திரன் தாய் ஜெயலட்சுமி அவர்களுக்கு வயது 62 என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சுசீந்திரன் தாயார் மறைவு செய்தி கேட்டதும் சிம்பு உள்பட பல திரையுலக பிரமுகர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன