1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 13 ஜனவரி 2021 (11:55 IST)

’பத்து தல’ படத்தில் இணைந்த ரஞ்சித் பட ஹீரோ!

இயக்குனர் ரஞ்சித் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவர் தற்போது சிம்புவின் ’பத்து தல’ படத்தில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சிம்பு நடிக்க உள்ள ’பத்து தல’என்ற படத்தில் ஏற்கனவே கௌதம் கார்த்திக் என்ற ஹீரோ நடிப்பதால் இந்த படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் கொண்ட படம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது பா.ரஞ்சித்தின் அட்டகத்தி கபாலி மெட்ராஸ் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த கலையரசன் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
’பத்து தல’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவந்தது மட்டுமின்றி கலையரசனின் புகைப்படத்துடன் கூடிய ’பத்து தல’போஸ்டர் ஒன்றும் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிம்பு, கௌதம் கார்த்திக், கலையரசன் ஆகிய மூன்று முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் இணைந்து இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது ஏற்கனவே பிரியா பவானி சங்கர், தீஜே அருணாச்சலம் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
தற்போது கலையரசன் இணைந்திருப்பதை அடுத்து மேலும் சில பிரபலங்கள் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என்றும் கூறப்படுகிறது