வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (17:18 IST)

சில்லுனு ஒரு காதல் ட்ரிப்... குடும்பமா சேர்ந்து என்ஜாய் பண்ணும் சூர்யா!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா - ஜோதிகா தம்பதி காதலர்களின் சிறந்த ஜோடியாகவும் பார்க்கப்படுகின்றனர். உயிரிலே கலந்தது , மாயாவி , பேரழகன் , பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க , சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்து ரசிகர்ளின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்டனர். 
 
பின்னர் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களுக்கு தியா , தேவ் என்ற மகள் , மகன் இருக்கின்றனர்.  திருமணம் குழந்தைக்கு பிறகு சினிமாவிற்கு சில வருடங்கள் இடைவெளி விட்டிருந்த ஜோதிகா தற்போது மீண்டும் மகளிர் மட்டும் , 36 வயதினிலே , காற்றின் மொழி , ஜாக்பாட் , ராட்சசி உள்ளிட்ட நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் டென்மார்க்கிற்கு ட்ரிப் சென்று என்ஜாய் பண்ணிய போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி லைக்ஸ் குவிந்து வருகிறது.