1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (08:19 IST)

27 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யவம்சம்… இரண்டாம் பாக அப்டேட் கொடுத்த சரத்குமார்!

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் வெற்றி பெற்ற படங்களில் ‘சூர்யவம்சம்’ திரைப்படத்துக்கு முக்கிய இடம் உண்டு. சரத்குமாரை ஒரு மிகப்பெரிய ஸ்டார் நடிகர் ஆக்கியதில் இந்த படத்துக்கு பெரும்பங்கு உண்டு. 1997 ஆம் ஆண்டு ரிலீஸான இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது. திரையரங்கில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்தது. இன்றளவும் தொலைக்காட்சி, யுட்யூப் என ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படம் நேற்றோடு ரிலீஸாகி 27 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதையடுத்து படத்தின் கதாநாயகனான சரத்குமார் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அவரின் சமூகவலைதளப் பதிவில்  “கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு சிந்தைகயிலும்  நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக் கூடிய சிறப்புவாய்ந்த குடும்ப திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் . கதாபாத்திரன்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி. விரைவில் சூர்யவம்சம்-2” என கூறியுள்ளார்.