புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (14:22 IST)

தயாரிப்பாளர் சங்க அனுமதியின்றி இன்று வெளியாகும் திமிரு புடிச்சவன்?

இன்று திரையிடப்படுவதாக இருந்த செய் திரைப்படம் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் அடுத்த வாரம் ரிலிஸாகிறது. திமிரு புடிச்சவன் மற்றும் காற்றின் மொழி இன்று ரிலிஸ் ஆகிறது.

திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் தேதி மற்றும் திரை அரங்குகளை முறைப்படுத்துவதற்காக தயாரிப்பாளர் சங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன்படி தங்கள் படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய விரும்பும் தயாரிப்பாளர்கள் அந்த குழுவிடம் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற்று அதன் பின் தான் வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது.

இப்படி இருக்கையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படம் தீபாவளி வெளியீடாக வர இருந்தது. தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் படம் பெருவாரியான தியேட்டர்களை அபகரித்துக் கொண்டதால் போதுமான தியேட்டர்கள் இல்லாததால் தீபாவளி ரேஸில் இருந்து பின் வாங்கியது. அதனால் நவம்பர் 16 ஆம் தேதி (இன்று) ரிலீஸ் ஆகும் என அறிவித்தது படக்குழு. இந்த திடீர் அறிவிப்பால் நவமபர் 16 ஆம் தேதி ரிலிஸுக்கு திட்டமிட்டிருந்த காற்றின் மொழி, செய் போன்ற சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழல் உருவானது.

இதனால் அதிருப்தியடைந்த செய் படத்தின் கதாநாயகன் நகுல் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட இது பற்றி புகார் கூறினார். ஆனாலும் விடாப்பிடியாக இன்று திமிரு புடிச்சவன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலிஸாகி உள்ளது. இதனால் செய் படம் இன்று வெளியாகாமல் அடுத்த வாரம் நவம்பர் 23 –ந்தேதி ரிலிஸாகிறது.