வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (12:01 IST)

யோக்கியர்கள் கமலுக்கு வாக்களியுங்கள் - பழ.கருப்பையா பேட்டி!

சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ள பழ.கருப்பையா தனது சமீபத்திய பேட்டியில் பின்வருமாறு பேசியுள்ளார். 

 
நாம் திராவிடர்கள் என்பது அடிப்படை உண்மை தமிழர்கள் என்பது அடிப்படை உண்மை. அதற்கும் மக்கள் நீதி மையத்திற்கும் முரன் ஒன்றும் கிடையாது. சமயச் சார்பின்மை கருத்து உடையவர்கள், இந்துத்துவா என்று சொல்லி முஸ்லிம்களை வெறுக்கிறதும், கிறிஸ்தவர்களை ஒதுக்கி வைக்கிறது இதற்கு நான் படையே தவிர மற்றதற்கு கிடையாது. 
 
கமல் சமயசார்பு உடைய கட்சி என்றும் திராவிட கட்சிகள் எல்லாம் திராவிடக் கட்சிகள் அல்ல என ஸ்டாலின் சொல்கிறார். எங்கள் கட்சியில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று அவர் தான் திராவிடத்தை விட்டு நழுவுகிறே வரை தவிர மற்றவர்கள் இல்லை. 
 
இப்பொழுது நோக்கம் 50 ஆண்டுகளாக மாறிமாறி ஊழல் செய்து வருகிற திமுக, அதிமுக பெரிதான கட்சிகளால் சின்ன கட்சிகள் தாக்கு பிடிக்க முடியவில்லை ஒரு மாற்று அரசியல் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். இந்த இரண்டு திராவிட கட்சிகளும் எல்லா இடத்திலும் திட்டத்திலும் 60% எனக்கு 40% மக்களுக்கு இந்த நிலை மாறி 100% மக்களுக்கு சேர வேண்டும். 
 
ஒரு லோடு மணல் விலை 6000 ரூபாய் அரசுக்கு சேர வேண்டியது. ஆனால் இந்த மணல் மக்களிடம் ஒரு லோடு மணல் விலை 40 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது மீதி 34 ஆயிரம் ரூபாய் எங்கே போய் சேர்கிறது. இந்த சுரண்டலை நாம் ஒழிக்க வேண்டாமா மக்கள் கொதித்து இருக்கிறார்கள் இந்த இரண்டு ஊழல் கட்சிகளையும் விரட்டியடிக்க வேண்டும்.
 
நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கு எதிரான தேர்தல் அதனால் வாக்கு சதவீதம் அதிகமாக பெற்றிருக்கிறார்கள். ஆனால் மாற்று சிந்தனை உள்ளவர்கள் இந்த கட்சியில் இணைய வேண்டும் சின்ன சின்ன கட்சி என்று கருதாதீர்கள். யோக்கியர்கள் வாக்களியுங்கள். மாற்றுக் கட்சியாக யாரும் இல்லாததால் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வாக்களித்தனர். 
 
ஆனால், இந்த நிலை மாறியுள்ளது இந்தமுறை எடப்பாடி வரமுடியாது ஸ்டாலினும் வரக் கூடாது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ரகசிய தொடர்பு உள்ளது எடப்பாடி ஆட்சி  நீடிக்க காரணம் ஒரு பாதி அதிமுக எம்எல்ஏ என்றால் இரண்டு மடங்கு திமுக எம்எல்ஏக்கள் தான். கூட்டணியிலிருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வெளிவர வேண்டும் இடதுசாரி சிந்தனை உள்ள கமலுடன் சேரவேண்டும் என தெரிவித்தார்.