திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (07:21 IST)

அமெரிக்க ரசிகருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி: புகைப்படங்கள் வைரல்!

அமெரிக்க ரசிகருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி: புகைப்படங்கள் வைரல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது குடும்பத்தினருடன் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்றார் என்பதும் அமெரிக்காவில் அவர் உடல் பரிசோதனை செய்து கொண்டபின் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து ரஜினிகாந்த் வெளியே வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது மீண்டும் அமெரிக்காவில் உள்ள ரஜினியின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது
 
அமெரிக்காவை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினியுடன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த ஆரோக்கியமாக சந்தோஷமாக இருப்பதை பார்த்ததும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது