திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (11:26 IST)

சூர்யா பார்த்து பாராட்டிய வசந்தின் புதிய திரைப்படம்!

இயக்குனர் வசந்த் இயக்கியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மூன்று பேர் மூன்று காதல் படத்துக்குப் பிறகு, இயக்குனர் வசந்த் சாய் தற்போது, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். பத்மப்ரியா, கருணாகரன், பார்வதி மற்றும் லஷ்மி பிரியா ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ள இந்த படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ளது. நீண்ட காலமாக திரையரங்க வெளியீட்டுக்காக காத்திருந்த இந்த படம் இப்பொது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இந்த படம் திரையுலகில் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வசந்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சூர்யா இந்த படத்தைப் பாராட்டியுள்ளார். தன்னுடைய டிவிட்டில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்குக் கிடைக்கும் பாராட்டுகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. நான் அந்த படத்தை பார்த்து ரசித்தேன். வசந்த் சாரின் வாழ்க்கை குறித்த ஆழமான புரிதல்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுகின்றன. வசந்த் மற்றும் அனைத்துப் படக்குழுவினருக்கும் மரியாதை.’ எனக் கூறியுள்ளார்.