செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (06:43 IST)

அனுபவப் பாடம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன்: பத்மப்ரியா டுவிட்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரமுகராக இருந்த டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்மப்ரியா ஆகிய இருவரும் சமீபத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் திமுகவில் இணைந்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள பத்மபிரியா அரசியலில் இதுவரை ஏட்டு பாடத்தை படித்து வந்த நான் தற்போது அனுபவ பாடத்தை படிக்க தொடங்கி இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
 
அரசியல் என்பது பெரும் கடல். இதுவரை ஏட்டுப்பாடத்தில் படித்ததையே நம்பிய நான், அனுபவப் பாடம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி, திராவிட அரசியலின் மாண்பையும், முக்கியத்துவத்தையும் இப்போதுதான் உணர்கிறேன்.
 
அதன்படி, மக்கள் பணி செய்ய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில், மருத்துவர் மகேந்திரன் வழிகாட்டுதலின்படி கழகத்தில் இணைத்துக்கொண்டேன்.