1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (13:23 IST)

புனித் ராஜ்குமாருக்கு நடிகர் சூர்யா கண்ணீர் அஞ்சலி!

புனித் ராஜ்குமாருக்கு நடிகர் சூர்யா கண்ணீர் அஞ்சலி!
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது மறைவிற்கு நடிகர் சூர்யா கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைரலாகி வருகிறது
 
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பமும் தனது குடும்பம் மிகவும் நெருக்கமானது என்றும் புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை கேட்டு தனது தந்தை தாங்க முடியாத துயரத்தில் உள்ளார் என்றும் சூர்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
 
சிறு வயதில் இருந்தே நானும் புனித் ராஜ்குமார் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்றும் இரண்டு குடும்பமும் மிகவும் நெருக்கமான குடும்பம் என்றும் அவரது மறைவை எங்கள் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது