சூர்யா - வின் என்ஜிகே படக்குழுவின் புதிய அப்டேட்

Last Modified வெள்ளி, 23 நவம்பர் 2018 (11:40 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் என்ஜிகே. அரசியல் கலந்த திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.
 
 
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
 இதுகுறித்து தற்போது செல்வராகவன் கூறியிருப்பதாவது, மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா, அழகான சித் ஸ்ரீராம், திறமை வாய்ந்த பாடலாசிரியல் உமாதேவி உள்ளிட்டோருடன் என்ஜிகே படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டது. சிறப்பான கூட்டணி. என்று கூறியுள்ளார்.
 
படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை வருகிற நவம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த செய்தியை கேட்ட சூர்யா ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :