1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (07:07 IST)

கங்குவா படத்துக்காக பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சியை ஷூட் செய்த படக்குழு!

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஆந்திராவின் ராஜமுந்திரி காடுகளில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை சமீபத்தில் படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கங்குவா படத்தில் சூர்யாவோடு திஷா படானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.