1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (07:57 IST)

சூர்யாவின் கங்குவா படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகர்!

சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தை 3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில் உருவாக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் காட்சித்துணுக்கு இணையத்தில் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. அதையடுத்து நேற்று மாலை முதல் லுக் போஸ்டரும் ரிலீஸ் ஆனது. சமீபத்தில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வைரல் ஆனது.

படத்தில் ஏற்கனவே நட்டி வில்லனாக நடித்து வரும் நிலையில் மற்றொரு முக்கியமான வில்லன் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் படக்குழுவோடு இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.