வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:31 IST)

சூர்யாவின் கங்குவா திரைப்படத்தைப் பார்த்து மிரண்ட தேவி ஸ்ரீ பிரசாத்!

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் காட்சித்துணுக்கு சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் படத்தின் சிலகாட்சிகளைப் பார்த்து மிரண்டு போனதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் “சூர்யா தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சிறுத்தை சிவாவின் திரைக்கதை வேறு லெவலில் இருந்தது. காட்சிகளில் பிரம்மாண்டம் வெளிப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.