புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (15:21 IST)

சூர்யாவின் கங்குவா படத்துக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தேதியில் வேட்டையன் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. இதனால் கங்குவா தள்ளிப் போவதை சூர்யா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் கங்குவா படத்தின் சேட்டிலைட் வியாபாரம் இன்னும் முடியவில்லையாம். சமீபகாலமாக தொலைக்காட்சி நிறுவனங்கள் புதிய படங்கள் வாங்குவதில் தயக்கம் காட்டி வரும் நிலையில் கங்குவா போன்ற முன்னணி நடிகரின் படத்துக்கும் இந்த சிக்கல் எழுந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.