ராஜமௌலியின் மாவீரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த சூர்யா.. இதுதான் காரணமா?
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ரிலீஸாகி இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் கங்குவா ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலி “சூர்யா எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரை இயக்கும் வாய்ப்பு தவறிவிட்டது” எனப் பேசியுள்ளார். ராஜமௌலி இயக்கிய மாவீரன் படத்தில் முதலில் சூர்யாவை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அப்போது சூர்யா வாரணம் ஆயிரம் மற்றும் அயன் ஆகிய படங்களில் நடித்து வந்ததால் அந்த படத்தைத் தவறவிட்டாராம்.