வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 நவம்பர் 2024 (15:29 IST)

கங்குவா தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாதது நல்லதுதான்… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொல்லும் காரணம்!

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் அடுத்தவாரம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

கங்குவா படம் நீண்டகாலமாக சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் மாறி மாறி கடைசியாக இப்போது நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது. முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் ரிலீஸானதால் தள்ளிவைக்கப்பட்டு, தீபாவளிக்கு ரிலீஸாகும் என சொல்லப்பட்டு பின்னர் அதுவும் தள்ளிவைக்கப்பட்டது.

இது குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “கங்குவா படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியிருந்தால் எங்களுகு 4000 முதல் 5000 திரைகள்தான் கிடைத்திருக்கும். ஆனால் இப்போது தனியாக ரிலீஸாவதால் 11500 திரைகள் கிடைத்துள்ளன. அதனால் தீபாவளிக்கு ரிலீஸாகாதது நல்லதுதான்.” எனப் பேசியுள்ளார்.