ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2024 (10:36 IST)

சூர்யாவின் புகை பிடிக்கும் காட்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு.. படத்தில் இருந்து நீக்கப்படுமா?

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 படத்தின் வீடியோ நேற்று வெளியான நிலையில் இந்த வீடியோவில் புகைபிடித்தபடி சூர்யா நடந்து வரும் காட்சிகள் இருந்தது.

இந்த காட்சியை சூர்யா ரசிகர்கள் கொண்டாடினாலும் சில சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த காட்சிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கார்த்தி தனது படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்த நிலையில் சூர்யாவும் அதை கடைபிடிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து கொண்டு வருகின்றன.

இது குறித்து அனைத்து மக்கள் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது:

சிகரெட் காட்சிகளை மையப்படுத்தி நடித்து இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் சினிமா நடிகர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் சூர்யா அவர்கள் தனது சொந்த தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரே வைக்காத புதிய படத்தின் டீசர் காட்சியில் சிகரெட் புகைத்தபடி வருவது கேடு கெட்ட காட்சியாக உள்ளது.

உங்கள் தம்பி நடிகர் கார்த்தி அவர்கள் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கொள்கை பிடிப்போடு உள்ளார். உங்கள் அப்பா ஒரு பிள்ளைக்கு நல்லது சொல்லி கொடுத்து உங்களுக்கு சொல்லி கொடுக்க மறந்துவிட்டாரா? அல்லது தந்தை சொல்லை மதிக்கவில்லையா?

உங்கள் அறக்கட்டளையின் மூலம் படிக்கும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா?

உங்கள் நடிப்பை நம்பாமல் எப்போது சிகரெட்டை நம்பினீர்களோ அப்போதே நடிகராக தோற்று போய்விட்டீர்கள் சூர்யா.

Edited by Mahendran