திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2024 (06:33 IST)

அதிகாலை வெளியான ’சூர்யா 44’ வீடியோ.. ரசிகர்களை ஏமாற்றிய கார்த்திக் சுப்புராஜ்..!

இன்று நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் 44 வது படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக கார்த்தி சுப்புராஜ் நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதன்படி இன்று அதிகாலை 12.12 மணிக்கு கார்த்திக் சுப்புராஜ் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் சூர்யா வாயில் சிகரெட் உடன் மாஸாக நடந்து வந்து தன்னுடைய ஆட்களின் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை பெற்று சுடுவது போன்ற காட்சியை உள்ளது.

ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோவில் இறுதியில் இந்த படத்தின் டைட்டில் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று மட்டும் கூறி கார்த்திக் சுப்புராஜ் இந்த வீடியோவை முடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இருப்பினும் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என்று கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். சூர்யாவின் பிறந்தநாள் வெளியான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா, பூஜா கிட்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில்,   ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில்  சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த உருவாகி வருகிறது.  மேலும் இந்த படத்தை  2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன்பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.


Edited by Siva