வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (12:06 IST)

சூர்யா 42 மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

surya 42
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
’சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார். இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் உச்சபட்ச குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சூர்யா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர் என்பதும், தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.