செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (20:57 IST)

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

Jayam
ஜெயம் ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளதை அடுத்து இந்த படத்தின் டைட்டில் மற்றும் நாயகி இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஜெயம் ரவி நடித்த அடுத்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ’சைரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
ஜெயம் ரவி ஏற்கனவே எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே