ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 26 டிசம்பர் 2018 (08:09 IST)

சூர்யா படத்திற்கு டைட்டில் சொல்லுங்கள் – ரசிகர்களைக் குஷியாக்கிய கே வி ஆனந்த்

சூர்யா, கே.வி. ஆனந்த் இணையும் அடுத்தப் படத்திற்கான டைட்டிலை தேர்வு செய்யுமாறு ரசிகர்களைக் கேட்டுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

சூர்யா- கே.வி. ஆனந்த் இணைந்த முதல் படமான அயன் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக அமைந்தது மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் சூர்யாவிற்கென ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்து அவரைத் தென்னிந்திய நடிகர்களில் முக்கியமானவராக்கியது.

அதையடுத்து இருவரும் இணைந்த படமான மாற்றான் படுதோல்வியடைந்தது. அதனால் இருவரும் மீண்டும் இணையாமல் சிலக்காலம் இடைவெளி எடுத்துக்கொண்டனர். அதன் பின் இருவரும் வேறு வேறு திசைகளில் பயனித்து வந்தனர். ஆனால் இப்போது இருவருமே ஒரு ஹிட் கொடுக்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர். அதனால் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் பிரம்மாண்டமான இந்த தயாரிப்பில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சூர்யா இந்தப் படத்தில் பிரதமரின் காவல் அதிகாரியாக நடிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்திற்கு பெயரைத் தேர்வு செய்யுமாறு ரசிகர்களை வேண்டியுள்ளார் இயக்குனர் கே.வி. ஆனந்த். மீட்பான், காப்பான், உயிர்கா ஆகிய மூன்று தலைப்புகளைக் கொடுத்து, அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி கேட்டிருக்கிறார். பெருவாரியான ரசிகர்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பைப் படத்திற்கு வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.