திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (20:54 IST)

கார்த்தியின்'' விருமன்'' பட ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

viruman
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘விருமன்’.இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் ஆனது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்திற்கு இன்று சென்சார் சான்றிதழ் வழங்கியுளார். அதில், விருமன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்த்த நிலையில், ஒரு நாள் தள்ளி இப்படம் ரிலீஸாகிறது.

தற்போது,  சூர்யாவின் 2டி நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,  வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி விருமன் படம்  உலகம் முழுவதும் தியேட்டரில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்சி அடைந்துள்ளனர்.