இப்ப நானும் வேறடா....கிட்ட வந்து பாருடா - அனல் பறக்கும் சூரரைப் போற்று "மாறா" தீம் பாடல் !
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.
நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில் அடுத்தடுத்து வெளிவந்த இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் "மாறா" இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில் பதிவிட்டு சூர்யா பாடும் ஒரு சிறிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தெருக்குறள் அறிவு எழுதியுள்ள இப்பாடலை
சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.