செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (10:33 IST)

ஒத்தாசைக்கு ஒத்த செருப்ப யூஸ் பண்ணுங்க! – சூர்யாவை அடிக்க பார்த்திபன் ப்ளானா?

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் லட்ச ரூபாய் பரிசளிக்கப்படும் என முன்னணி அமைப்பு கூறியதாக செய்திகள் வெளியான நிலையில் பார்த்திபனின் ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா அறிக்கை விடுத்தது தொடர்பாக இந்து இளைஞர் முன்னணியினர் அவரது உருவ படத்தை எரித்து போராட்டம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்நிலையில் சூர்யாவை செருப்பால் அடித்தால் லட்ச ரூபாய் பரிசு என சிலர் கூறியுள்ளதாக வெளியான செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் சூர்யா ‘அந்த லட்ச ரூபாய் மூலம் ஒரு குழந்தைக்கு கல்வி கிடைக்கும் என்றால் ஒரு மாணவனுக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறேன்” என கூறியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் பார்த்திபன் ஒத்த செருப்பு படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதையொட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் ” லட்ச ரூபாய் போட்டியில் அடிக்கச் சொல்ல ஆள் இருக்கு,வாங்கிக் கொண்டு அதை ஒரு மாணவருக்கு வழங்கவும் உயர்ந்த மனமிருக்கு, ஒத்தாசைக்கு-ஒத்த செருப்பை பயன்படுத்தினால்,அம்மாணவருக்கு கூடுதல் தொகை லட்சத்து ஒரு பைசாவை வழங்குவேன் என இம்முதலாம் ஆண்டின் நினைவில் அறிவிக்கிறேன் பார்த்திபன்” என பதிவிட்டுள்ளார்.

வழக்கமாகவே பார்த்திபனின் ட்வீட்டுகள் பெரும் குழப்பத்தை அளிப்பவை என்பதால் அடிப்பதற்கு ஒத்தை செருப்பை பயன்படுத்த அவர் சொல்வது அவரே சூர்யாவை அடிக்க சொல்கிறாரா என பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.