வியாழன், 14 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2024 (16:13 IST)

கங்குவா படம் எப்போது ரிலீஸ்… தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்த அப்டேட்!

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியுள்ளார்.

சமீபத்தில் ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர் “இப்போது எங்கள் நிறுவனத்தின் முதன்மை கவனம் எல்லாம் தங்கலான் படத்தின் மேல்தான் உள்ளது. அதன் ரிலீஸுக்குப் பிறகு கங்குவா ரிலீஸ் ஆகும். இப்போதைக்கு எங்கள் குறிக்கோள் தீபாவளி ரிலீசாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.