1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 1 ஜூன் 2024 (06:37 IST)

சூர்யா 44 படத்துக்காக அந்தமானில் தயாராகும் பிரம்மாண்ட செட்… மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்!

சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஷூட்டிங் ஜூன் மாதம் அந்தமான் தீவுகளில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்லது. இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜோடு ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். இதோடு கலை இயக்குனராக ஜாக்கியும், படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். வில்லனாக உறியடி விஜயகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில அந்தமானில் நடக்கவுள்ள ஆக்‌ஷன் காட்சிகளுக்கான முன் தயாரிப்பு பணிகள் சம்மந்தப்பட்ட ஒரு நிமிட மேக்கிங் வீடியோவை எக்ஸ் தளத்தில் கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.