ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : வியாழன், 30 மே 2024 (08:12 IST)

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்!

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் ரிலீஸ் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்குப் பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு தகவலோ அந்த படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக சொல்கிறது.

இந்நிலையில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஷூட்டிங் ஜூன் மாதம் அந்தமான் தீவுகளில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்லது. இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜோடு ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

இதோடு கலை இயக்குனராக ஜாக்கியும், படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.