திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (11:16 IST)

லியோ, வேட்டையனைக் கடந்த கங்குவா வசூல்… எங்குத் தெரியுமா?

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

படம் நேற்று ரிலீஸாகி பெரும்பாலும் கலவையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது. இந்நிலையில் 2000 கோடி ரூபாய் டார்கெட் வைக்கப்பட்டு ரிலீஸ ஆன கங்குவா படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. தமிழகத்தில் இந்த படம் தோராயமாக 20 முதல் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகி வரும் எதிர்மறை விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் மிகப்பெரிய சரிவு இருகும் என தெரிகிறது.

இந்நிலையில் ஒரே ஆறுதலாக படம் இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு கணிசமான முதல் நாள் வசூலைப் பெற்றுள்ளது. படத்தின் இந்தி வெர்ஷன் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது இந்த ஆண்டு வெளியான லியோ மற்றும் வேட்டையன் ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம். சூர்யா வட மாநிலங்களில் சென்று ப்ரமோஷன் செய்தது இந்த வசூலுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.