1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (22:36 IST)

''கள்வன் ''பட டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா

kalvan
நடிகர் ஜிவி பிரகாஷ்குமாரின் கள்வன் பட டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ்குமார் நடித்துள்ள  படம் கள்வன்.

இப்படத்தை அறிமுகம் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி  தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம்தான் பேச்சிலர், ராட்சசன் ஆகிய படங்களைத் தயாரித்திருந்தது.

கள்வன் படஷூட்டிங்  அடர்ந்த காடுகளில் படமாக்ப்பட்டு வரும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில், இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர்.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.