திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (08:46 IST)

பழச மறந்து இயக்குனர் ஹரி ஸ்டுடியோவுக்கு வருகை தந்த சூர்யா!

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்ததாக கூறப்பட்ட ’அருவா’ திரைப்படம் திடீரென டிராப் ஆனது. இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பிந்தைய கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும் ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இது சமம்ந்தமாக இயக்குனர் ஹரி சூர்யா மேல் கோபத்தில் சில அறிக்கைகளையும் வெளியிட்டார். இந்நிலையில் இப்போது இயக்குனர் ஹரி புதிதாக திறந்துள்ள குட்லக் டப்பிங் ஸ்டுடியோவின் திறப்பு விழாவுக்கு சூர்யா வருகை தந்தது திரையுலகில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் தமிழக சட்டசபை சபாநாயகரான அப்பாவுவும் கலந்துகொண்டார்.