அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் சூர்யா 44 எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா மற்றும் படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் பணியாற்றுகின்றனர்.
படத்தில் சூர்யாவோடு பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், டாணாக்காரன் தமிழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லனாக உறியடி விஜயகுமார் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. தற்போது சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங்குக்கான செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நாளில்தான் அஜித்தின் குட் பேட் அக்லிபடமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.