வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (13:26 IST)

சூர்யா இல்லாமல் பூஜையை முடித்த பாண்டிராஜ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 40 படத்தின் பூஜை இன்று சூர்யா இல்லாமல் நடந்தது.

 
சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.
 
முதல் முறையாக சரத்குமார் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் வடிவேலு இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று படத்தின் பூஜை நடந்தது. சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை என தெரிகிறது.