வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (20:44 IST)

அதீத தன்னம்பிக்கையின் பிறப்பிடம்... சேரனுக்கு வாழ்த்து கூறிய சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சேரன். இவர், பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

இவர் கன்னட சூப்பர் ஸ்டார்  சுதீப்  நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இயக்குனரும் நடிகருமான சேரன் இன்று பிறந்த நாள் கொண்டாடும்  நிலையில் அவருக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குனர் சேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’சினிமா தன் அசுர கரங்களால் அழுத்தி மூழ்கடிக்க முயலும்போதெல்லாம், தனக்குத் தானே கைகொடுத்துக்கொண்டு கரையேறுபவர்...

தன் கற்பனையை தனக்கான பாதையாக மாற்றிக் கொண்டு நடந்ததால் அதீத தன்னம்பிக்கையின் பிறப்பிடம்...

வெற்றி வந்ததும் தனக்கென நில்லாமல் சினிமாவின் அடுத்த கட்ட முயற்சிகளை வலிமையாக முன்னெடுத்தவர்.

எத்தனை சிக்கல்கள்,  சிரமங்கள் கடந்தாலும் அதை புறமுதுகில் மூட்டையாக்கிவிட்டு மலை முகடு மூச்சிரைக்காது ஏறிப் பார்ப்பவர்...

ஆகச் சிறந்த முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சேரன் அவர்களின் ஒவ்வொரு ஏக்கமும் வெற்றிக் கொடி கட்டட்டும்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’’என்று தெரிவித்துள்ளார்.

சினிமா தன் அசுர கரங்களால் அழுத்தி மூழ்கடிக்க முயலும்போதெல்லாம், தனக்குத் தானே கைகொடுத்துக்கொண்டு கரையேறுபவர்...

தன் கற்பனையை தனக்கான பாதையாக மாற்றிக் கொண்டு நடந்ததால் அதீத தன்னம்பிக்கையின் பிறப்பிடம்...

வெற்றி வந்ததும் தனக்கென நில்லாமல் சினிமாவின் அடுத்த கட்ட முயற்சிகளை வலிமையாக முன்னெடுத்தவர்.

எத்தனை சிக்கல்கள்,  சிரமங்கள் கடந்தாலும் அதை புறமுதுகில் மூட்டையாக்கிவிட்டு மலை முகடு மூச்சிரைக்காது ஏறிப் பார்ப்பவர்...

ஆகச் சிறந்த முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இயக்குனர்  சேரன் அவர்களின் ஒவ்வொரு ஏக்கமும் வெற்றிக் கொடி கட்டட்டும்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’’என்று தெரிவித்துள்ளார்.