அஜித் மற்றும் விஜய் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்த கார்த்தி
கார்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
காவல்துறை சம்மந்தபட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதை என்பதால்தான் இந்தப்படம் வெற்றிப் படமாக அமைய முடிந்தது. இந்தப் படத்தை பார்த்து விட்டு காவல் அதிகாரிகள் பலரும் பாராட்டினார்கள். முக்கியமாக அந்த வழக்கில் சம்பந்தபட்ட ஒரு உயரதிகாரி படம் பார்க்கும் போது மிக நெகிழ்சியாக இருந்தது என படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியதாக கார்த்தி தெரிவித்திருந்தார்.
கடைசியாக வெளியான ‘காஷ்மோரா’ மற்றும் ‘காற்று வெளியிடை’ இரண்டு படங்களுமே தோல்விப் படங்களாக அமைந்தன. இந்த நிலையில்‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மூலம் அதிலிருந்து மீண்டு பழைய மார்க்கெட்டை பிடித்துவிட்டார். படம் திரையிட்ட அனைத்து இடத்திலும் செம்ம வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது.
கார்த்தியின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் தீரன் தான் என கூறப்படுகின்றது, இந்நிலையில் தீரன் வெற்றிக்காக ரசிகர்களுடன் கார்த்தி கலந்துரையாடியபோது, ரசிகர் ஒருவர் அஜித் குறித்து கேட்டார், அதற்கு கார்த்தி ‘அஜித் சார் ஒரு ஜெண்டில் மேன், அவரை சந்தித்த பிறகு மேலும் அவரை பிடிக்க ஆரம்பித்துவிட்டது’ என கூறியுள்ளார். அதேபோல் விஜய் குறித்து கேட்ட போது ‘விஜய் சாரை அண்ணனுடன் கல்லூரியில் சந்தித்துள்ளேன், மிகவும் எளிமையானவர், தன்னம்பிக்கை உள்ளவர்’ என கூறியுள்ளார்.