1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (18:54 IST)

நடிகை பூனம் பாண்டேவை கைது செய்ய இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

பிரபல ஆபாச நடிகை பூனம் பாண்டேவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா வழக்கில் தன்னை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கருத்ஹிய நடிகை பூனம் பாண்டே, தன்னை கைது செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது ராஜ்குந்த்ராவின் இணையதளத்தில் பூனம் பாண்டேவின் ஆபாச படம் இடம் பெற்றிருப்பது அவருடைய தவறல்ல என்றும் உண்மையில் அவர் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர் என்றும் எனவே அவரை கைது செய்யக்கூடாது என்றும் அவரது வழக்கறிஞர் வாதாடினார் 
 
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பூனம் பாண்டேவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்