திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (17:09 IST)

மொட்டை தலையுடன் சூப்பர் ஸ்டார்...ஜவான் பட புதிய போஸ்டர் ரிலீஸ்

shah rukh  khan- jawan
ஷாருக்கான்-அட்லீ இணைந்து உருவாக்கியுள்ள ஜவான் படடத்தின் புதிய கெட்டப் ரிலீசாகியுள்ளது.

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில்  இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள படம் ஜவான். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி என முன்னணி தமிழ் நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் இந்தியிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் அனிருத்.

பாலிவுட்டிற்கு நுழையும் அனிருத்தின் முதல் படம் ஜவான் படம். இதில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதால் கூடுதல் கவனம் பெற்றது.

சமீபத்தில், இப்படத்தின் முதல் சிங்கில் ‘’’வந்த இடம் என் காடு,  நீதான்  பலியாடு’ என்ற  பாடல் 'டி சீரீஸ்-தமிழ் யூடியூப்' பக்கத்தில் வெளியிடப்பட்டு பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

ஜவான் படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், ஜவான் படத்தில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில்,  மொட்டை தலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ஷாருக்கான் உள்ளார். இந்தப் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஷாருக்கானின் பதான் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்த  நிலையில் இப்படமும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

வாங்க, ஆட்டம் போட நேரம் வந்தாச்சு!