திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 11 ஜூலை 2020 (22:25 IST)

உழைப்பின் வலி உணர்ந்தவர் சூப்பர் ஸ்டார்.. லவ்யூசார்- சேரன் நெகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினியை உழைப்பின் வலி உணர்ந்தவர் என்று பாராட்டியுள்ளார் இயக்குநர்  சேரன்.

இயக்குநர் சேரனின் ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அருணாச்சலம்"(1997) படத்தின் 202வது நாள் வெற்றிவிழா மேடையில் இயக்குனர் சேரனை 'பொற்காலம்'(1997) படம் கொடுத்ததற்க்காக மேடையில் அழைத்து தங்கச்சங்கிலி பரிசாக அணிவித்து அவரை கவுரவித்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

உடல் ஊனமுற்றவர்களுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும்' என்ற கருத்தை அழகாக சொல்லியிருந்த இயக்குனர் சேரனை இந்த மேடையில் வாழ்த்த ஆசைபடுகிறேன்' என்று கூறி பொற்காலம் பட டைரக்டர் சேரனை அழைத்தா் ரஜினிகாந்த் . இப்படி கூறியதை கேட்டு ஆனந்த கண்ணீருடன் நெகிழ்ச்சியாக மேடை ஏறி பரிசு பெற்றார் சேரன்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திருக்கும் இயக்குநர் சேரனுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை இருவரின் பிறந்தநாளும் டிசம்பர் 12 ஆகும். என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

மறக்க முடியாத நெகிழ்வான தருணம். இன்றுவரை அதே ப்ரியம் வைத்து பேசும் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் சூப்பர்ஸ்டார்.. நல்லவற்றை தேடிப்பிடித்து பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே..C2H முதல் டிவிடி வெளியிட்டபோதும் முதலில் மனமாற பாராட்டியதும் அவரே. உழைப்பின் வலி உணர்ந்தவர். லவ்யூசார்.. என்று பதிவிட்டுள்ளார்.